Template:Appeal/Karthik/ta

From Donate
Revision as of 20:08, 28 February 2019 by Pcoombe (talk | contribs) (Pcoombe moved page Template:2011FR/Appeal-Karthik/text/ta to Template:Appeal/Karthik/ta: new location for appeals)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

விக்கிப்பீடியா பங்களிப்பாளர் கார்த்திக் நாடாரிடமிருந்து

ஒரு தீவிரவாத தாக்குதல் என் நகரை உலுக்கிய அந்நாளில்தான் விக்கிப்பீடியா என் வாழ்வின் போக்கை மாற்றியது

2011இல் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் பன்னாட்டு அளவில் தலையங்கமாகிய போதும் அது பற்றிய நேரடித் தகவலை எங்கேயும் பெற முடியவில்லை.

அது பற்றிய தகவல்களை தேடிக்கொண்டிருப்பது நான் மட்டுமல்ல என்பதை நன்கு உணர்ந்திருந்தேன். அதனால் நான் இந்தக் குழப்ப நிலையை மக்கள் உணர இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்களுடனும் வரைபடத்துடனும் கூடிய விக்கிப்பீடியா கட்டுரை மூலம் வழிசெய்தேன்.

அன்று முதல் ஆயிரக்கணக்கான திருத்தங்களை விக்கிப்பீடியா கட்டுரைகளில் செய்தேன். அன்றைய நாட்களில் விக்கிப்பீடியாவில் எனது அனுபவங்கள் புகைப்பட பத்திரிகையியலில் எனது ஆர்வத்தை தெளிவாக உணரச் செய்தது. அன்றிலிருந்து அந்த பாதையைப் பின்பற்றினேன்.

நான் விக்கிப்பீடியாவுக்கு மிகுந்த நன்றி உடையவனாகினேன். அத்துடன் அதன் பொருளாதார நெருக்கடி பற்றி அறிந்ததும் நான் ₹ 250 ஐ எனது பங்குக்கு நன்கொடையாக வழங்கினேன். நீங்களும் ஒரு நன்கொடையை அளித்து இந்த பெறுமதிவாய்ந்த வளத்தினை முழு உலகுக்கும் பயன்படும் வகையில் செய்வீர்களா?

விக்கிப்பீடியா நமது உலகைப் பகிர்ந்துகொள்ள உதவுகின்றது. ஒவ்வொரு மாதமும் 470 மில்லியன் வெவ்வேறான பார்வையாளர்களுடன் நாம் தகவல்களைப் பெறும் மற்றும் பரிமாறும் விதத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது – சில வேளைகளில் ஒரு சம்பவம் நடந்த கணமே நம்மால் அதை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு விளம்பரமும் இல்லாமல், 1000க்கும் குறைவான சேவை வழங்கிகளுடன், 100க்கும் குறைவான பணியாளர்களுடன் இவை அனைத்தையும் விக்கிப்பீடியா இலவசமாகவே செய்கின்றது.

இலட்சக்கணக்கான சேவை வழங்கிகளோடும் பணியாளர்களோடும் இயங்கும் கூகுள், ஃபேஸ்புக் போன்ற தளங்களோடு ஒப்பிடும் போது இது அற்புதமானது.

இணைய தளங்களில் 5ஆவது மிக பிரபலமான மற்றும் அதிகமான வருகையாளர்களைக் கொண்ட தளமாக விக்கிப்பீடியா இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. இதேபோல் ஒவ்வோர் ஆண்டும் என்னையும் உங்களையும் போன்ற மக்களிடம் இருந்தும் ஏன் இவர்கள் உதவியை வேண்டி நிற்கின்றார்கள் என்பதிலும் வியப்பு இல்லை.

நீங்களும் ₹ 100, ₹ 200, ₹ 300 அல்லது உங்களுக்கு விக்கிப்பீடியா எவ்வளவு பெறுமதியானது என்பதை காட்டும் அளவில் ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்குவீர்களா?

நன்றி,

கார்த்திக் நாடார்
விக்கிப்பீடியா பங்களிப்பாளர்